வரலாறு

ஒரு படத்தில் பார்த்த டயலாக், "உயிருடன் இருப்பவன் நான் தான். என்ன நடந்தது என்று நான் கூறுவதைத் தான் ஊர் நம்பப்போகிறது"

சிந்திக்க வைக்கிறது! வரலாற்றை கேள்விக்கு உட்படுத்துகிறது. என்ன கேள்வி தெரியுமா? இவையனைத்தும் உண்மையில் நடந்தவையா? இல்லை நடந்ததாக நம்பவைக்கப் பட்டவையா? இப்படி கேள்வி தோன்றி விட்டால், நாம் இதுவரை நம்பிய அணைத்து வரலாற்று நிகழ்வுகளும் மதிப்பிழந்து போய் விடும். நாம் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

உன் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய். அதே நேரம் உன்னுடன் வாழும் சக மனிதனை உன்னை போலவே எண்ணி செயல்படு. வரலாற்றை தெரிந்து கொள். அறிவை வளர்க்கவும், தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், இலக்கணம் கற்றுக்கொள்ளவும் மட்டுமே. இவை அன்றி அதை அப்படியே கேள்வி கேட்காமல் பின்பற்ற அல்ல.

புதிய சிந்தனைகள் மலரட்டும்....

என்றும் நட்புடன்,
- மித்ரா

Comments

Popular posts from this blog

பெண் பார்க்கும் படலம்

பேனா

என் கடவுள்