பேனா
பேனா
எழுதுவதற்காகவே பேனா வாங்கினேன். அதை பற்றி எழுத வேண்டுமல்லவா!
அன்புள்ள பேனாவுக்கு ,
நீயும் காகிதமும் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை. என் தோழர்களுக்குக் கூட இல்லாத இடம், உனக்கு என் வாழ்வில் உண்டு. காரணம் தெரிந்து கொள். அவர்களிடம் சொல்ல முடியவில்லை அல்லது சொல்ல கூடிய சூழ்நிலை இல்லை என்றால் நான் தேடுவது உன்னையும் காகிதத்தையும் தான்.

அவனின் தோழி என்று எங்குவேண்டுமானாலும் பெருமையுடன் சொல்வேண். இந்த பதினைந்து வருட நட்பு எங்கள் தோற்றத்தை மாற்றி உள்ளது அனால் எங்கள் உள்ளங்களையும் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் பாசத்தையும் மரியாதையையும் அல்ல. இன்று அவனுக்கு திருமணமாகி ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. அவனின் நன்மைக்காக என்றுமே வாழ்த்துவேன் உன் மூலமாக...

என்றும் பிரியா நட்புடன்,
- மித்ரா!
Comments
Post a Comment