என் கடவுள்
கடவுளை சொந்தமாக்க முடியுமா? முடியும், அதன் பிறப்பிடமே நாமாக இருந்தால். என் நம்பிக்கையைத் தான் சொன்னேன். உண்மை தான் அதன் பிறப்பிடம் என் மனம். அப்போ என் கடவுள் என் சொந்தம் தானே? கடவுளே(எந்தன் நம்பிக்கையே) உன்னையும் நான் இது நாள் வரையில் கண்மூடித்தனமாக நம்பவில்லை. என் தகுதிக்கு மீறிய நம்பிக்கையற்ற விஷயங்களை செய்தது இல்லை. இந்த கால கட்டம் மிகவும் கடினமானதாக உள்ளது. உன்னை மறந்து நான் பட்ட பாட்டிற்கு அளவே இல்லை. என்னை மன்னித்து விடு. நான் உன்னை நம்பியது எப்போதும் வீணானது இல்லை. இனியும் உன்னை மறந்து நரகத்தை அனுபவிக்க நான் தயாராக இல்லை.
உன்னை என் மனதார ஏற்றுக் கொள்கிறேன். மாற்றங்கள் நல்லது தான். ஆனால் ஆபத்தான மாற்றம் நடக்காமல் இருப்பது அதைவிட முக்கியம். என்னைச் சுற்றி நான் செய்யக் கூடிய விஷயங்கள் எண்ணிக்கையில் குறையும் போது கோபம் வருகிறது. மனிதர்கள் தான் அதற்க்குக் காரணம் என்று நான் நினைக்கிறன். இது அர்த்தமற்றது என்று புரிந்தாலும் கஷ்டமாக உள்ளது. என் வாழ்க்கையை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். உன்னை நம்பி செய்கிறேன், என்னைக் காப்பாற்று என் கடவுளே.
என்றும் நட்புடன்,
- மித்ரா
Comments
Post a Comment