பெண் பார்க்கும் படலம்
பெண் பார்க்கும் படலம்
இந்த கலாச்சாரம் நல்லதா அல்லாதானு நான் பேச வரல. ஏன்னா இந்த மதிகெட்ட சமுதாயத்துல இது ஒரு பகுதியா பின்னி இருக்கு. ஆயிரத்தெட்டு ஆசைகளுடன் ஒரு ஆணும், அதே போல இன்னும் அதிக ஆசைகளுடன் ஒரு பெண்ணும் வாழ்க்கையில் இணைய முடியுமா என்று அவரவர்களின் வீட்டாரும் உறவினர்களும் முடிவு செய்ய நடக்கும் "கண்காட்சி" தான் இது. இந்த வார்த்தையை உபயோகிப்பதற்கு பல பேர் ஆட்சேபனை செய்ய மாட்டர்கள் என்று நினைக்கிறன்.
ஒரு ஆண் ஒரே பெண்ணை நேரில் பார்த்து அது திருமணத்தில் முடியும்போது நலம். அப்படி இல்லாமல் ஒவ்வொரு முறையும் "இவரா என் கணவர்?, இவரா நம் துணைவி" என்று யோசிக்கும் மனது எவ்வளவு காய பட்டிருக்கும்? காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் இந்த பழக்கத்தை கண்காட்சி என்று தானே சொல்ல முடியும்? எல்லா பொருட்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பிடித்தவற்றை வாங்குவார்கள். பிடிக்காதவற்றை விட்டுவிடுவார்கள்.வித்தியாசம் என்ன வென்றால் இங்கு உள்ளது உயிருள்ள மனிதர்கள். ஆதலால் அது கொடுக்கும் வலி அதிகம். இது எல்லோருக்கும் தெரியும் தானே?
தெரிந்திருந்தும் பல வருடங்களாக இந்த மனக் கசப்பை உண்டாக்கும் வழக்கத்தைக் கடைபிடித்து வருகிறார்கள் மனிதர்கள். எந்த அடிப்படையில் இதைத் தவறு என்கிறேன் என்றால், சதி ஒழிக்கபட்டதன் அடிப்படையில் தான். அதையும் நம் முன்னோர்கள் சரி என்று எண்ணி பல காலமாக செய்து வந்தார்கள். இதில் என்ன துரதஷ்டம் என்றால் அந்த பெண்களும் இதை தவறு என்று எண்ணுவது இல்லை. பெரியவர்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று செய்கிறார்கள். கேள்வி கேட்க மறுக்கிறார்கள். அது தன் சுதந்திரத்தை பற்றி இருந்தாலும் உயிருக்கும் மானத்திற்கும் தீங்கு விளைவித்தாலும் கேள்வி கேட்க நினைப்பது கூட இல்லை.
பார்த்தவுடன் ஒருவர் நம்முடன் சேர்ந்து வாழ முடியுமா என்று எப்படி தெரியும்? சரி பழகி பார்ப்போம் என்றால், ஒரு சில நாட்களில் ஏதோ சில அற்ப காரணத்தைச் சொல்லி இந்த திருமணம் வேண்டாம் என்று பேசிக் கொள்கிறார்கள். இதில் சிக்கித் தவிக்கும் மனங்களை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. திருமணம் நடத்த முடிவு செய்யும் அணைத்து நல்ல உள்ளங்களையும் கேட்கிறேன். இதே போல உங்கள் திருமணமும் நடந்திருக்கலாம். அவை சந்தோசம்மான தருணங்களாக இருந்திருந்தால் உங்கள் பிள்ளைகளும் அதை அனுபவிக்கட்டுமே. அப்படி மனக்கசப்புகளுடன் நடந்திருந்தால், ஏன் அதை உங்கள் பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டும்?
எதற்காக இவ்வளவு கூச்சல்? வேறு எப்படி பெண் பார்ப்பதை செய்வது? எப்படி செய்வது என்று நீங்களே முடிவு செய்யுங்கள். ஆனால் மறக்காதீர்கள். நல்லது நினைத்து நல்லது செய்தால் நன்மையே நடக்கும். ஒரு சந்திப்பில் இருமனங்களின் வாழ்க்கைத் தொடக்கமாக அமைய வேண்டுமென்று நினைத்து செயல்படுங்கள். நேரில் பார்த்த பின்பு நடக்க வேண்டியது திருமணம் மட்டுமே. அடுத்த நபரை நோக்கி நகர்வது அல்ல.
என்னென்ன பொருத்தங்கள் பார்க்க வேண்டுமோ அனைத்தையும் முன்பே பார்த்து கொள்ளுங்கள். எனக்கு இதில் நம்பிக்கை இல்ல விட்டாலும் நம்பிள்ளை உள்ள அனைவர்க்கும் சொல்கிறேன். படிக்கும் போது கோபம் வந்தாலும், யோசித்து பாருங்கள், உண்மை புரியும்.
வாழ்வோம் வாழ விடுவோம்!!!
என்றும் நட்புடன்
உங்கள் தோழி
மித்ரா
Agreed... Vali adhigam
ReplyDeleteWorst culturally
ReplyDelete