முடிவுகள்
முடிவுகள் எடுக்கும் திறமை, வாழ்க்கையை வாழத் தேவையான முக்கியமான ஒன்று என்று சொல்லலாம். பொதுவாகவே நம்மைச் சார்ந்த முடிவுகளை மற்றவர்கள் எடுப்பதில் நாம் சுகம் அடைகிறோம், அது அடிமைத்தனத்தின் ஆரம்பம் என்று தெரியாமலே. கோபம் வருகிறதா? நல்லது. நாம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம் என்று பொருள். உங்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று முடிவெடுக்க உங்களை விட வேறு யாரால் முடியும்?
தேர்வு உங்களுடையது
எல்லாமே நான் எடுக்கும் முடிவு தான் என்று விருப்பம் போல வாழ்வது நல்லதல்ல. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொருள் உணர்ந்து அதன் நன்மை தீமைகளை அறிந்து செய்வது தான் நல்லது. எடுக்கும் முடிவுகள் நமக்கு மட்டும் மகிழ்ச்சி அளிப்பவையாக இல்லாமல் இயன்ற வரை பிறரைப் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும். பிறருக்காக முடிவுகளை மாற்றி நம்மை நாமே வருத்தி கொள்வதும் தவறு. ஏனென்றால் அப்படி செய்யும்போது நாம் அடையும் வேதனை, மற்றவர்கள் மீது கோபத்தையும் வருத்தத்தையும் வரவழைக்கும்.
நமக்கு நாமே முடிவுகளை எடுப்போம்.... வாழ்க்கையை வாழ்வோம்.
என்றும் நட்புடன்
-மித்ரா
அருமையான பதிவு
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
Delete