சிபாரிசு
இந்த வார்த்தையை விரும்பாதவள் நான். என் மனதுக்கு 'சிபாரிசு' பிடிக்காது. நானும் செய்ய மாட்டேன். எனக்காக அதைச் செய்யவும் விடமாட்டேன். வாழ்க்கையில் சில தருணங்கள், 'நமக்கு' னு உள்ள கொள்கைகளைக் கடைபிடிக்க முடியாதபடி, பறவையின் மீது வலையைப் போல விழுந்து விடும். அந்த வகைலயில் என்னை யாரவது, எதாவது செய்து காப்பாற்றுங்கள் என்ற மனநிலையில் இருந்தேன். அப்போது நடந்த, கண்களுக்கு தெரியாத சிபாரிசுகள் ஏராளம். அதில் முக்கியமான ஒன்றும் சுவாரசியமான ஒன்றும் - என் பாலினம். ஆம், நான் பெண் என்பதாலும் வேளைக்கு போகும் ஒரே ஒருத்தி என்பதாலும் கிடைத்த சிபாரிசு. வேலைக்காக மெடிக்கல் செய்ய போயிருந்தேன். கண்ணனுக்கு எட்டும் தூரம் வரையில் ஆண்களின் வரிசை நீண்டு கொண்டிருந்த வேலை, அனைவரும் எனக்கு வழி விட்டார்கள். எனக்கு மரியாதையின் காரணமாகவோ, எரிச்சலின் காரணமாகவோ வழி அமைத்துக் கொடுத்த அணைத்து ஆண்மகன்களுக்கும் தலை வணங்குகிறேன். மறக்க முடியாத தருணங்களில் ஒன்று அது. அங்கிருந்த ஒவொரு நபரின் செயலால் தான் அங்கிருந்த வேலையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு அன்று என் பணிக்கும் திரும்பினேன்.
என்றும் நன்றிகளுடன்,
- மித்ரா
என்றும் நன்றிகளுடன்,
- மித்ரா
Comments
Post a Comment