Posts

Showing posts from June, 2020

வரலாறு

ஒரு படத்தில் பார்த்த டயலாக், "உயிருடன் இருப்பவன் நான் தான். என்ன நடந்தது என்று நான் கூறுவதைத் தான் ஊர் நம்பப்போகிறது" சிந்திக்க வைக்கிறது! வரலாற்றை கேள்விக்கு உட்படுத்துகிறது. என்ன கேள்வி தெரியுமா? இவையனைத்தும் உண்மையில் நடந்தவையா? இல்லை நடந்ததாக நம்பவைக்கப் பட்டவையா? இப்படி கேள்வி தோன்றி விட்டால், நாம் இதுவரை நம்பிய அணைத்து வரலாற்று நிகழ்வுகளும் மதிப்பிழந்து போய் விடும். நாம் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறோம்? உன் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய். அதே நேரம் உன்னுடன் வாழும் சக மனிதனை உன்னை போலவே எண்ணி செயல்படு. வரலாற்றை தெரிந்து கொள். அறிவை வளர்க்கவும், தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், இலக்கணம் கற்றுக்கொள்ளவும் மட்டுமே. இவை அன்றி அதை அப்படியே கேள்வி கேட்காமல் பின்பற்ற அல்ல. புதிய சிந்தனைகள் மலரட்டும்.... என்றும் நட்புடன், - மித்ரா

முடிவுகள்

Image
 முடிவுகள் எடுக்கும் திறமை, வாழ்க்கையை வாழத் தேவையான முக்கியமான ஒன்று என்று சொல்லலாம். பொதுவாகவே நம்மைச் சார்ந்த முடிவுகளை மற்றவர்கள் எடுப்பதில் நாம் சுகம் அடைகிறோம், அது அடிமைத்தனத்தின் ஆரம்பம் என்று தெரியாமலே. கோபம் வருகிறதா? நல்லது. நாம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டோம் என்று பொருள். உங்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று முடிவெடுக்க உங்களை விட வேறு யாரால் முடியும்? தேர்வு உங்களுடையது எல்லாமே நான் எடுக்கும் முடிவு தான் என்று விருப்பம் போல வாழ்வது நல்லதல்ல. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொருள் உணர்ந்து அதன் நன்மை தீமைகளை அறிந்து செய்வது தான் நல்லது. எடுக்கும் முடிவுகள் நமக்கு மட்டும் மகிழ்ச்சி அளிப்பவையாக இல்லாமல் இயன்ற வரை பிறரைப் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும். பிறருக்காக முடிவுகளை மாற்றி நம்மை நாமே வருத்தி கொள்வதும் தவறு. ஏனென்றால் அப்படி செய்யும்போது நாம் அடையும் வேதனை, மற்றவர்கள் மீது கோபத்தையும் வருத்தத்தையும் வரவழைக்கும். நமக்கு நாமே முடிவுகளை எடுப்போம்.... வாழ்க்கையை வாழ்வோம். என்றும் நட்புடன் -மித்ரா

சிபாரிசு

Image
இந்த வார்த்தையை விரும்பாதவள் நான். என் மனதுக்கு 'சிபாரிசு' பிடிக்காது. நானும் செய்ய மாட்டேன். எனக்காக அதைச் செய்யவும் விடமாட்டேன். வாழ்க்கையில் சில தருணங்கள், 'நமக்கு' னு உள்ள  கொள்கைகளைக் கடைபிடிக்க முடியாதபடி, பறவையின் மீது வலையைப் போல விழுந்து விடும். அந்த வகைலயில் என்னை யாரவது, எதாவது செய்து காப்பாற்றுங்கள் என்ற மனநிலையில் இருந்தேன். அப்போது நடந்த, கண்களுக்கு தெரியாத சிபாரிசுகள் ஏராளம். அதில் முக்கியமான ஒன்றும் சுவாரசியமான ஒன்றும் - என் பாலினம். ஆம், நான் பெண் என்பதாலும் வேளைக்கு போகும் ஒரே ஒருத்தி என்பதாலும் கிடைத்த சிபாரிசு. வேலைக்காக மெடிக்கல் செய்ய போயிருந்தேன். கண்ணனுக்கு எட்டும் தூரம் வரையில் ஆண்களின் வரிசை நீண்டு கொண்டிருந்த வேலை, அனைவரும் எனக்கு வழி விட்டார்கள். எனக்கு மரியாதையின் காரணமாகவோ, எரிச்சலின் காரணமாகவோ வழி அமைத்துக் கொடுத்த அணைத்து ஆண்மகன்களுக்கும் தலை வணங்குகிறேன். மறக்க முடியாத தருணங்களில் ஒன்று அது. அங்கிருந்த ஒவொரு நபரின் செயலால் தான் அங்கிருந்த வேலையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு அன்று என் பணிக்கும் திரும்பினேன். என்றும் நன்றிகளுடன், - மித

என் கடவுள்

Image
                           கடவுளை சொந்தமாக்க முடியுமா? முடியும், அதன் பிறப்பிடமே நாமாக இருந்தால். என் நம்பிக்கையைத் தான் சொன்னேன். உண்மை தான் அதன் பிறப்பிடம் என் மனம். அப்போ என் கடவுள் என் சொந்தம் தானே? கடவுளே(எந்தன் நம்பிக்கையே) உன்னையும் நான் இது நாள் வரையில் கண்மூடித்தனமாக நம்பவில்லை. என் தகுதிக்கு மீறிய நம்பிக்கையற்ற விஷயங்களை செய்தது இல்லை. இந்த கால கட்டம் மிகவும் கடினமானதாக உள்ளது. உன்னை மறந்து நான் பட்ட பாட்டிற்கு அளவே இல்லை. என்னை மன்னித்து விடு. நான் உன்னை நம்பியது எப்போதும் வீணானது இல்லை. இனியும் உன்னை மறந்து நரகத்தை அனுபவிக்க நான் தயாராக இல்லை.                             உன்னை என் மனதார ஏற்றுக் கொள்கிறேன். மாற்றங்கள் நல்லது தான். ஆனால் ஆபத்தான மாற்றம் நடக்காமல் இருப்பது அதைவிட முக்கியம். என்னைச் சுற்றி நான் செய்யக்  கூடிய விஷயங்கள் எண்ணிக்கையில் குறையும் போது கோபம் வருகிறது. மனிதர்கள் தான் அதற்க்குக் காரணம் என்று நான் நினைக்கிறன். இது அர்த்தமற்றது என்று புரிந்தாலும் கஷ்டமாக உள்ளது. என் வாழ்க்கையை மாற்ற என்னால் மட்டும் தான் முடியும். உன்னை நம்பி செய்கிறேன், என்னைக