தென்றலின் தோழி
தென்றலின் தோழி
வறண்டு போன என் தாய்மை உணர்வை உயிர்ப்பித்தவள் நீ. வெளியில் சிரித்தாலும் எதையோ இழந்தது போல இருந்தேன். உன் வரவு என் வாழ்க்கையை புரட்டி போட்டது. எந்தத் தவறான சிந்தனையும் மனதில் வரவிடாமல் இருக்க எவ்வளவு வேலைகளைச் செய்ய முடியுமோ செய்து கொண்டு இருந்தேன். நீ வந்த உடன் உன்னை காணவே எந்த வேலை எவ்வளவு மும்முரமாக செய்து கொண்டிருந்தாலும் வந்து விடுகிறேன். எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் ஒரு பக்கம் இருக்க, உன்னை மெல்ல மெல்ல தொட்டு செல்லும் தென்றலிடம் தோழியை போல பேசிக் கொண்டிருப்பதை பார்த்து வியந்தேன். உன் வயதில் இருந்தால் தான் பெரிய விஷயங்களும் சிறிதாக தெரியும் போல. "உங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு இருப்பதற்க்கு, நான் என்ன சொன்னாலும் கேட்க்கும் தென்றலிடமே பேசிக் கொள்கிறேன்" என்று நீ சொல்லாமல் சொல்லி சலித்துக் கொள்வது போல தோன்றுகிறது.
உன் பிஞ்சு இதழ்களில் 'அத்தை' என்று நீ கூப்பிட, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நான்.

தென்றலின் தோழி - ஜோஸ்லின் அமல்ராஜ்.
என்றும் நட்புடன்,
- மித்ரா

உன் பிஞ்சு இதழ்களில் 'அத்தை' என்று நீ கூப்பிட, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நான்.

தென்றலின் தோழி - ஜோஸ்லின் அமல்ராஜ்.
என்றும் நட்புடன்,
- மித்ரா
this is the best smile!!
ReplyDeleteThank you Diksha!!!
Delete