கூந்தல்
கூந்தல்
என் உடம்பின் ஒரு முக்கியப் பகுதியாக, பிறப்பில் இருந்து இன்று வரை என்னுடன் இருந்து வருகிறாய். பல நேரங்களில் உன்னை நான் கவனிப்பது இல்லை. கோபத்தில் சில நேரத்தில் உதிர்ந்து செல்வாய். நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இன்று சொல்கிறேன் கேள்.
உன்னால் தான் என் தோற்றமே இவ்வாறு உள்ளது. கண்ணாடியின் முன் நின்று கொண்டு "நீ அழகுடி செல்லம்" என்று சொல்ல ஒரு முக்கியமான காரணம் நீ. பேசவில்லை என்றாலும் உணர்த்தி விடுகிறாய் உன் முக்கியத்துவத்தையும் அன்பையும்.
எதோ மன குழப்பம் இன்று, அனால் நீ படர்ந்து விரிந்து, என் காதுகளின் மேல் வந்து கொடுத்த அரவணைப்பு எனக்கு ஆறுதல் அளித்தது, நம்பிக்கையும் கொடுத்தது. உன் அணைப்பு என் உற்ற தோழமையின் நெருக்கத்தையும் உடன் இருக்கும் கதகதப்பையும் நினைவூட்டுகிறது.
உன் இருப்பை நிதமும் விரும்பும் உன் அன்பு தோழி,
Comments
Post a Comment