நான் பேசுவதை கேட்பது யார்?

நான் பேசுவதை கேட்பது யார்?

                                             இந்த கேள்வி அனைவரின் மனதிலும் ஒரு முறையாவது எழுந்திருக்கும். காரணம், எப்போதுமே நாம் துணையுடன் இருப்பதில்லை. அப்படியே புடை சூழ இருந்தாலும், "என் மனதில் உதிக்கும் கேள்விகளையும் வருத்தங்களையும் யாரிடம் சொல்வது" என பல சமயம் யோசித்திருப்போம். இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால், "என் பிரச்னையைத் தீர்க்க வேண்டாம். காது கொடுத்து கேட்டாலே போதும்." என நினைப்போம். இது ஒரு பெரிய விஷயமா என்று யோசிப்பவர்கள் அதிஷ்டசாலிகள். ஏனென்றால் அவர்களை யாரோ ஒருவரோ இல்லை அதற்கும் மேற்பட்டவரோ இப்படிப்பட்ட யோசனை வராமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

Related imageஇந்த ஒரு விஷயத்தை சுற்றிச் பல பிரச்சனைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பழங்காலத்தில் கூட்டு குடும்பங்கள் இருந்தன. அப்பொழுது இந்த குறையைத் தீர்க்க அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டி மற்றும் கிட்டத்தட்ட ஒரே வயதில் இருக்கும் அவர்களின் பிள்ளைகள் என்று பல சொந்தங்கள் அருகில் இருந்தன. இப்போது அவர்களைத் தொடர்பு கொள்ளவே தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. 

இந்தத் தொழில் நுட்பத்தின் தாக்கம் எந்த அளவு உண்டு என்றால், தொலைவில் உள்ள உறவுகளுக்கு அருகில் கொண்டு செல்லும் என நினைக்கிறார்கள். அதே சமயத்தில், இது அருகில் இருப்பவர்களை பல மைல் தூரம் பிரித்து வைத்திருக்கிறது. பிள்ளைகள் பேசுவது குறைந்துவிட்டது. அப்படியே பேசினாலும் கேட்க ஆள் இல்லை. அவர்கள் வெளியே சென்று விளையாடுவதும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளும் அழிந்து போய்விட்டன.

                                                   அடுத்த படியாக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் பலருக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷம், சாய ஒரு தோள், பேசுவதை கேட்க ஒரு நல்ல மனது. அதன் பிறகு தான் ஆறுதலும் அதில் இருந்து மீள வழிகளை காண்பித்து கொடுக்கும் நபர்களும். "எனக்கு செவி கொடுக்க யாரும் இல்லை" என்று தோன்றுகிறதா? சரி தான். உங்களுக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்க கூடாது அல்லவா? கேளுங்கள், அவர்களின் நம்பிக்கைக்குரிய நபர்களாக மாறுங்கள். மனம் திறந்து சொல்வார்கள். இந்த நிகழ்வினால் உங்கள் வாழ்க்கையில் கூட மாற்றங்கள் நிகழலாம்.

                                                  ஒருவரின் பேச்சைக் கேட்பதாலேயே, நாம் பல விதமான சமூக பிரச்சனைகளை சமாளிக்க முடியும். அது மட்டும் இல்லாமல் நடக்கவிருக்கும் ஆபத்தான தலைமுறை மாற்றங்களில் இருந்து நம் மக்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

உயிர்களுக்கு செவி கொடுப்போம்!!!
உணர்வுகளுக்கு உயிர் கொடுப்போம்!!!

என்றும் நட்புடன்
- மித்ரா 

Comments

  1. அனுபவமிகுந்த வார்த்தைகள்... முதிர்ந்த எழுத்து கோர்வைகள் சிறப்பு... தொடர்ந்து எழுதுங்கள்.... சொல்வதை கேட்பதற்கு இங்கு சில செவிகளும் உண்டு, மன்னிக்கவும் Head set கள் காதுகளை அடைத்துள்ளன... மொபைல்களின் காட்சி திரை வழியாகவே சொல்வதை பார்த்து அறிந்து கொள்கிறோம்... தொழில்நுட்பம் அருகில் உள்ளவர்களை பிரித்தே வைத்திருக்கிறது திதர்சன உண்மை....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சின்னா! உங்கள் வார்த்தைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன. இது மேலும் எழுத என்னை தூண்டுகிறது

      Delete
  2. அண்டை வீட்டாரிடம் கூட அன்பு பாராட்டிய நாம், என்றைக்கு பிராய்லர் கோழிக்கூண்டுகளைப்போல அபார்ட்மெண்ட் கலாச்சாரத்திற்கு மாறினோமோ, அன்றே அழியத்தொடங்கி விட்டது நம்முள் இருந்த மனிதம்.. நல்ல கோர்வை.. தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி மித்ரா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா. எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட முக்கியமான காரணம் நீங்கள்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பெண் பார்க்கும் படலம்

பேனா

என் கடவுள்