நிதர்சனம்(Reality)

நிதர்சனம்(Reality)

                      இந்த உலகில் முரண்பாடுகள் நிறைய இருக்கின்றன. நாம் நினைப்பது அனைத்தையும் சரி என்றாலும், செய்ய முடிவதில்லை. உணர்வுகளுக்கும் நிதர்சனத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. என் சக மனிதனின் பசி தீராமல் என்னால் சாப்பிட முடியாது என்பது, என் உள் உணர்வாக இருக்கலாம் ஆனால் நிதர்சனம் என்னவென்றால் என் பசியை ஆற்றிக் கொண்ட பின்பே இதை நான் பேசுகின்றேன். தம்பி சாப்பிட்டானா இல்லையா என்று தெரியாமல் பல நாட்கள் நான் சாப்பிட்டு இருக்கிறேன். அந்த உணவு என் பசியை ஆற்றியது ஆனால் என் உணர்வுக்கு என்றுமே பதில் சொல்லியது இல்லை.

                     புத்திக்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டத்தில் வெல்வது புத்தியே. வெல்ல வைப்பது அன்றாட அடிப்படைத் தேவைகள். இது மறுக்க முடியாத உண்மை. இதை நான் புத்தகங்களில் படிக்கவில்லை. அனுபவித்து எழுதுகிறேன். பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதைப்பற்றி அடுத்து எழுதுகிறேன்.

உண்மை, நிதர்சனம், மெய்மை, பேருண்மை !!!

என்றும் நட்புடன்,
- மித்ரா 

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண் பார்க்கும் படலம்

பேனா

என் கடவுள்