தரிசு
தரிசு
அறிவு 'மிகுதியான' என் இனிய சமுதாயமே, நீ சாடும், அதுவும் பிள்ளை பேறு அற்றவர்களை சாடும், தரிசு அல்லது மலடு என்னும் சொல்லுக்கு அர்த்தம் சொல்கிறேன் கேள்.
யார் மலடு? பிள்ளை இல்லை என்ற ஏக்கத்தை நெஞ்சோடு சுமந்து கொண்டு, ஒவ்வொரு குழந்தையையும் தன் பிள்ளையாக நினைத்து அன்போடு அரவணைப்பவர்கள் அல்ல. அணைத்து செல்வங்களுக்குள்ளும் சிறந்ததான பிள்ளை பேறு கிடைத்தும், சில்லறைக் காரணங்களுக்காக அந்தத் தளிரைக் கருவிலேயே கலைக்கும், கலைக்க தூண்டும் அவர்களின் எண்ணம் தான் மலடு. பிள்ளை பெற்றும் அதைக் கண்ணின் மணி போலப் பார்க்க விரும்பாதவர்களின் சிந்தனை மலடு.
மலட்டுத் தன்மை பெண்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. ஆண்களுக்கும் தான். அதே போல பெற்றவள் மட்டும் தாய் அவதில்லை. தாய்மை உணர்வு கொண்ட அணைத்து ஆண் மகன்களும் மிக சிறந்த 'தாயுமானவர்' கள் தான்.
கடைசியாக, நல்ல புது எண்ணங்களை பிரசவிக்காத முட்டாள் சமுதாயமே நீயும் மலடு தான்.
என்றும் நட்புடன்,
- மித்ரா
கடைசியாக, நல்ல புது எண்ணங்களை பிரசவிக்காத முட்டாள் சமுதாயமே நீயும் மலடு தான்.... good 👏👌👍
ReplyDeleteநன்றி சின்னா அவர்களே
Delete