பரிசு

                                                               பரிசு

                       
                         பெயரைக் கண்டவுடன் முகத்திலும் இதழ்களிலும் ஒரு மலர்ச்சி, சாதாரண மனிதர்களுக்கு. சில மேதைகள், பரிசை லஞ்சம் என்றும் சொல்வார்கள். அது அவர்களின் கருத்து. பரிசு வெறும் பொருட்கள் மட்டும் இல்லை. நம் செயல்களின் விளைவுகளும் பரிசுகள் தான். அனால் இத்தனை வருட மனமுதிர்ச்சி கொடுத்த பாடம் பரிசுகளின் விதங்களும் அதன் புரிதல்களும்.
                         

                            நாம் நமக்கே கொடுக்கும் பரிசுகள், பிறர் நமக்கு கொடுக்கும் பரிசுகள், பொருட்கள், தேவையானது, தேவையற்றது, சந்தோஷம் அளிக்கும் பரிசுகள், வருத்தம் அளிக்கும் பரிசுகள், பிடித்த நண்பர்கள் கொடுப்பவை, பிடிக்காத நண்பர்கள் கொடுப்பவை, நட்பு கொடுப்பது, சொந்தங்கள் கொடுப்பது, அரசாங்கம் கொடுப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு பரிசுக்கும் ஒரு புத்தகமே போடலாம்.
                         
                             இதில் யார் கொடுக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்கிறோம், ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப் படுகிறோம்? அதில் மிக சிறந்தவற்றை தேர்ந்தெடுத்துக் கொண்டு எப்படி வாழ்க்கையை வாழ்கிறோம் என்பது நம் கைகளில் தான் உள்ளது.

வாழ்க்கையை  வாழ்வோம் !!!

என்றும் நட்புடன்,
மித்ரா 

Comments

  1. முதல் பரிசுக்கு சிறந்த வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா

      Delete

Post a Comment

Popular posts from this blog

பெண் பார்க்கும் படலம்

பேனா

என் கடவுள்