பெண் பார்க்கும் படலம்
பெண் பார்க்கும் படலம் இந்த கலாச்சாரம் நல்லதா அல்லாதானு நான் பேச வரல. ஏன்னா இந்த மதிகெட்ட சமுதாயத்துல இது ஒரு பகுதியா பின்னி இருக்கு. ஆயிரத்தெட்டு ஆசைகளுடன் ஒரு ஆணும், அதே போல இன்னும் அதிக ஆசைகளுடன் ஒரு பெண்ணும் வாழ்க்கையில் இணைய முடியுமா என்று அவரவர்களின் வீட்டாரும் உறவினர்களும் முடிவு செய்ய நடக்கும் "கண்காட்சி" தான் இது. இந்த வார்த்தையை உபயோகிப்பதற்கு பல பேர் ஆட்சேபனை செய்ய மாட்டர்கள் என்று நினைக்கிறன். ஒரு ஆண் ஒரே பெண்ணை நேரில் பார்த்து அது திருமணத்தில் முடியும்போது நலம். அப்படி இல்லாமல் ஒவ்வொரு முறையும் "இவரா என் கணவர்?, இவரா நம் துணைவி" என்று யோசிக்கும் மனது எவ்வளவு காய பட்டிருக்கும்? காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் இந்த பழக்கத்தை கண்காட்சி என்று தானே சொல்ல முடியும்? எல்லா பொருட்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பிடித்தவற்றை வாங்குவார்கள். பிடிக்காதவற்றை விட்டுவிடுவார்கள்.வித்தியாசம் என்ன வென்றால் இங்கு உள்ளது உயிருள்ள மனிதர்கள். ஆதலால் அது கொடுக்கும் வலி அதிகம். இது எல்லோருக்கும் தெரியும் தானே? தெரிந்திருந்தும் பல வருடங்களாக இந்த மனக் கசப