பேனா
பேனா எழுதுவதற்காகவே பேனா வாங்கினேன். அதை பற்றி எழுத வேண்டுமல்லவா! அன்புள்ள பேனாவுக்கு , நீயும் காகிதமும் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை. என் தோழர்களுக்குக் கூட இல்லாத இடம், உனக்கு என் வாழ்வில் உண்டு. காரணம் தெரிந்து கொள். அவர்களிடம் சொல்ல முடியவில்லை அல்லது சொல்ல கூடிய சூழ்நிலை இல்லை என்றால் நான் தேடுவது உன்னையும் காகிதத்தையும் தான். சுக்கு நூறாக உடைந்து போன என்னை ஒன்றாக திரட்ட உன்னால் மட்டும் தான் முடியும். இலக்கணப் பிழைகள் இருந்தாலும், நீ என்னை வெறுப்பதில்லை. உன்னை போல நண்பன் யாருக்கு வாய்க்கும்? என் நண்பனை பிடித்த அளவு உன்னையும் பிடிக்கும். அவனை விட வேறு யார் மேலும் இவ்வளவு பிரியம் இல்லை. அவனின் தோழி என்று எங்குவேண்டுமானாலும் பெருமையுடன் சொல்வேண். இந்த பதினைந்து வருட நட்பு எங்கள் தோற்றத்தை மாற்றி உள்ளது அனால் எங்கள் உள்ளங்களையும் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் பாசத்தையும் மரியாதையையும் அல்ல. இன்று அவனுக்கு திருமணமாகி ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. அவனின் நன்மைக்காக என்றுமே வாழ்த்துவேன் உன் மூலமாக... எல்லாமே சொல்லிவிட்டேன். கடைசியாக ஒன்று. அவனுக்கு