Posts

Showing posts from January, 2020

நான் பேசுவதை கேட்பது யார்?

Image
நான் பேசுவதை கேட்பது யார்?                                              இந்த கேள்வி அனைவரின் மனதிலும் ஒரு முறையாவது எழுந்திருக்கும். காரணம், எப்போதுமே நாம் துணையுடன் இருப்பதில்லை. அப்படியே புடை சூழ இருந்தாலும், "என் மனதில் உதிக்கும் கேள்விகளையும் வருத்தங்களையும் யாரிடம் சொல்வது" என பல சமயம் யோசித்திருப்போம். இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால், "என் பிரச்னையைத் தீர்க்க வேண்டாம். காது கொடுத்து கேட்டாலே போதும்." என நினைப்போம். இது ஒரு பெரிய விஷயமா என்று யோசிப்பவர்கள் அதிஷ்டசாலிகள். ஏனென்றால் அவர்களை யாரோ ஒருவரோ இல்லை அதற்கும் மேற்பட்டவரோ இப்படிப்பட்ட யோசனை வராமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். இந்த ஒரு விஷயத்தை சுற்றிச் பல பிரச்சனைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பழங்காலத்தில் கூட்டு குடும்பங்கள் இருந்தன. அப்பொழுது இந்த குறையைத் தீர்க்க அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டி மற்றும் கிட்டத்தட்ட ஒரே வயதில் இருக்கும் அவர்களின் பிள்ளைகள் என்று பல சொந்தங்கள் அருகில் இருந்தன. இப்போது அவர்களைத் தொடர்பு கொள்ளவே தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.